யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல..பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு திருமா கருத்து!
It is not fair for anyone to claim rightsThirumas opinion on the verdict of the Pollachi sexual case
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லைஎன்று திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைத்துள்ளது.இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் அரசு தரப்பில் உறுதியாக நின்று வக்கீல்கள் வாதாடி இருக்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமன்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. செல்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பதிவு செய்த தடயங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதனால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
It is not fair for anyone to claim rightsThirumas opinion on the verdict of the Pollachi sexual case