வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: முழுவிவரம் வெளியானது.!
vanniyar resrvation case judgement SC
வன்னியருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து என்ற உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த அரசாணை என்பது முறையாக இல்லை என்று, அரசாணையை ரத்து செய்து பிரபு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பது உரிய முறையில் இல்லை. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு முறை இல்லை என்றும், எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இட ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும், அந்த குழுவின் உடைய அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்றும் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு, மேல் முறையீட்டு வழக்கிலும் அரசின் சார்பில், மனுதாரர்கள் சார்பில் உரிய விளக்கம் அளிக்க வில்லை என்றும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரம் இருந்தாலும், அதிகாரத்துக்கு உட்பட்டு வழங்கலாம். ஆனால் அதற்கான நியாயமான காரணங்களை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு நியாயமான காரணங்கள் இந்த வழக்கில் மாநில அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே, இந்த உள் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவை ரத்து செய்வதாகவும், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்வதாகவும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
vanniyar resrvation case judgement SC