வாரிசு அரசியல்! போர்க்கொடி தூக்கிய திருப்பூர் துரைசாமி நீக்கமா? வைகோ பரபரப்பு பேட்டி!
Vaiko Say About Duraisami MDMK
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியலை கண்டித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரர் வைகோவிற்கு, அக்கட்சியின் அவை தலைவர் துரைசாமி கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைசாமியின் இந்த கடிதத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று, மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கடந்த இரண்டு வருடமாக வராத துரைசாமி ஒரு கடிதம் கொடுக்கிறார் என்றால், அது நல்ல நோக்கத்திலா இருக்கும்?
கட்சியில் 99.99 சதவீத நபர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. துரைசாமிக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருக்கலாம்.
தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் நல்ல உணர்வு இருக்கிறது. கடந்த முப்பது வருடமாக நாங்கள் போராடி வந்து விட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் கடந்து செல்வதற்கு தயாராக இருக்கிறோம். இதையும் கடந்து செல்வோம்.
துரைசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. சிலவற்றை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம், சிலவற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
ஜனநாயகம் முறைப்படி நாங்கள் கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம். தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் இந்த தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நடந்து முடிந்துவிட்டது. அமைதியாக நடந்திருக்கிறது. ஒற்றுமையாக நடந்திருக்கிறது என்றார் வைகோ.
English Summary
Vaiko Say About Duraisami MDMK