திருவிழா போல நடந்த மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்களே போகவில்லை.!! - வைகோவின் ரியாக்ஷன்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மதுரையில் நேற்று பிரம்மாண்டமான அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டு திடலில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் 600 கிலோ மலர் தூவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும் அதிமுக வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று மாலை 4 மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டில் கலந்து கொண்டு தனது உரையை ஆற்றினார். மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோவிடம் அதிமுக மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "அதிமுக மாநாட்டை ஆடம்பரமாக திருவிழா போன்று நடத்துகிறார்கள். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அவ்வளவு பேர் மாநாட்டிற்கு போகவில்லை. அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. திமுகவைப் போன்று ஒரு மாநாட்டை யாராலும் நடத்த முடியாது. அதிமுக நடத்தியுள்ள இந்த மாநாட்டினால் அரசியலில் எந்தவித மாற்றமும் ஏற்படாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko comments on Madurai AIADMK state conference


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->