திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி செய்த இஸ்லாமியர்கள்; தடுத்து நிறுத்திய போலீசார்; என்னதான் நடக்கிறது..?
Police stopped Muslim men from Kerala who attempted to climb the Thiruparankundram hill with biryani
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலின் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 01ந் தேதி உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவிட்டும் கார்த்திகை தீபத்தினமான 03-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாத நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துள்ளது. அத்துடன், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில், நடைபெற்று வருகிறது.

இந்த திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 06-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறவுள்ளது. ஹிந்துக்கள் நம்பிக்கையின் படி, கார்த்திகை தஹிபும் ஏற்றினால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அதை படுத்து நிறுத்திய திமுக அரசு, தற்போது மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 21-ஆம் தேதி சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் கோவில் மலையில் இன்று கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் பிரியாணியுடன் ஏற முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் மலையில் உள்ள தர்காவுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை எடுத்து சென்றுள்ளனர். அப்போது, மலை அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வாலிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அசைவ உணவை மலைக்கு கொண்டு செல்ல அனுமதில்லை என கூறி தடுத்துள்ளனர். இதையடுத்து கேரள இஸ்லாமியர்கள் பிரியாணியை திருப்பி எடுத்து சென்றுள்ளனர்.
English Summary
Police stopped Muslim men from Kerala who attempted to climb the Thiruparankundram hill with biryani