66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா?; 'இது பெரிய மோசடி' என்கிறார் ப. சிதம்பரம்..! - Seithipunal
Seithipunal


எஸ்ஐஆர் பணியின் போது, 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லை என்று நீக்கம் செய்யப்பட்டுள்ளமை மிக பெரிய மோசடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: 

எஸ்ஐஆர் ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு ஊரில் 13 பேர் உயிருடன் இருக்கிறார்கள், அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களை விட்டு விடலாம். இரட்டை பதிவை விட்டு விடலாம். முகவரியே இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் முகவரி இல்லாதவர்களை எத்தனை பேரை தெரியும். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தனக்கு முகவரி இல்லாதவர்களை யாரையும் தெரியாது என்றும், தூய்மை பணியாளர்கள் கூட ஏதோ ஒரு முகவரியில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒன்பது பேரில் ஒருவருக்கு முகவரியே கிடையாதா..? என்றும், இதைவிட ஒரு வேடிக்கையை நான் பார்த்ததே கிடையாது. இது மிகப்பெரிய மோசடி என்றும், அதுவும் தமிழகத்தில் இது பின்தங்கிய மாநிலம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காட்டுப் பகுதி மாநிலம் அல்ல என்றும், வனப் பகுதி மாநிலம் அல்ல  என்றும், மலைப்பகுதி மாநிலம் அல்ல என்றும், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்ற மாநிலம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எட்டு கோடி பேரில் 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இறந்தவர்களை ஏற்றுக்கொள்கிறோம். இரட்டை பதிவை ஏற்றுக் கொள்ளலாம் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி நம்புவது..? என்று நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்ஐஆர் பணி செய்தது தமிழகஅரசு ஊழியர்கள் என்றாலும் அந்த பணி செய்யும் போது தேர்தல் கமிஷனின் ஊழியர்களாக இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டியதோடு,  எஸ்ஐஆர் பணி செய்பவர் தமிழக அரசு ஊழியர்களாக இருந்து செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

அவர்கள் அந்த நாளுக்கு அந்த நேரத்திற்கு அவர் தேர்தல் கமிஷனின் ஊழியர் என்றும், தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவரை பதவியை விட்டு கூட நீக்கலாம். அதனால், அவர்களை தமிழக அரசு ஊழியர்கள் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் தற்போது இருக்கிறார் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் போது அவரும் தமிழக அரசு பணியாளர் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாங்கள் திமுக அரசு கூட்டணியில் இருக்கிறோம் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு தொகுதி பங்கீடு காக ஐந்து பேர் குழு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐந்து பேர் குழு திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்கள். அவர் நான் ஒரு கமிட்டி அமைப்பேன் அப்போது இரண்டு குழுக்களும் பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இரண்டு குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அனுப்பிய பிறகு தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Chidambaram says that the removal of 6644881 names from the voter list due to lack of address is a huge fraud


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->