ஆளுநரையே ஓட விட்டு சம்பவம் செய்தவர் நம்ம முதலமைச்சர் தான் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்த தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

இந்த நிலையில் சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

அப்போது பேசிய அவர்,  இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் முதல்வர் ஸ்டாலின் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சட்டசபையில் இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் ஒரு சம்பவத்தை நம் தலைவர் செய்துள்ளார். பொதுவாக நம் தலைவர் சட்டப்பேரவையில் வெளியிடும் அறிவிப்பால் எதிர்கட்சிகளைதான் ஓட விடுவார். ஆனால், இன்று ஆளுநரையே ஓட விட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi speech about governor Ravi out in assembly


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->