உதயநிதி துணை முதலமைச்சர் உறுதி?...அமைச்சர் எ.வ.வேலு OPEN TALK! - Seithipunal
Seithipunal


வேலூரில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் வேண்டும், அவர் முடிவு செய்து அறிவித்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என்று கூறினார்.

மேலும், கீழ்மட்ட தொண்டர்கள் முதல் கேபினட்டில் உள்ள அவைமுன்னவர் துரைமுருகன் உள்பட அனைவரும் அதனை உளமாற வரவேற்போம் என்று தெரிவித்த அவர், திமுக தலைவர் என்ன சொல்கிறாரோ அதை 100 சதவீதம் ஏற்று கொள்கிற ஒரு இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் தரமாக உள்ளதாக  மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி பாராட்டினார் என்றும், தமிழகத்தில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், வரும்  30-ந் தேதி மத்திய அரசின் சார்பில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நான் கலந்து கொள்ள உள்ளேன் என்று பேசிய அவர், அப்போது தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை கடிதம் மூலம் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udayanidhi deputy chief minister confirmed minister ev velu open talk


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->