CM ஸ்டாலின் விரைவில் நலம்பெற வேண்டும் - விஜய் வாழ்த்து!
TVK Vijay wish CM MK Stalin Health
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திங்கள் காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், முதல்வர் தற்போது மருத்துவமனையில் இருந்து நிர்வாக பணிகளை கவனித்து வருகிறார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் நலமாக உள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை தொடங்குவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “முதல்வர் ஸ்டாலின் விரைவில் முழுமையாக நலமடைந்து, மீண்டும் பணியில் முழு உற்சாகத்துடன் திரும்ப வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK Vijay wish CM MK Stalin Health