தவெக விஜய் பாஜக கூட்டணியில் இணைந்தால் திமுக தோல்வி உறுதி - ஜி.கே. வாசன் அழைப்பு!
TVK Vijay NDA alliance ADMK GK Vasan DMK
வரும் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுவான இலக்கின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் தெரிவித்தாவது, "தவெக-வுக்குப் பொது எதிரி தி.மு.க. தான்.
எனவே, 2026 தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், ஒத்த கருத்துடைய கூட்டணியில் (NDA) தவெக இணைந்தால், தி.மு.க.வின் தோல்வி உறுதி செய்யப்படும்" என்றார்.
அதாவது, தி.மு.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, விஜய்யின் தவெக, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்" என்று ஜி.கே. வாசனின் அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
TVK Vijay NDA alliance ADMK GK Vasan DMK