விஜய் கட்சியில் இணையும் முன்னாள் எம்எல்ஏ? தீயாய் பரவும் செய்தி! உண்மை என்ன?!
TVK Vijay BJP Ex MLA vijayadharani
2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற விஜயதரணி, மாநில தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்.
ஆனால், செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. சட்டமன்ற குழுத் தலைவர் பதவிக்கேனும் நியமிக்கப்படுவேன் என எண்ணிய போதும், அந்த பொறுப்பும் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த விஜயதரணி, 2024 பிப்ரவரியில் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
அந்தநேரத்தில், "மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தால் போட்டியிட விருப்பம்" என்றும் கூறினார். ஆனால் பாஜக, பழைய வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கே வாய்ப்பு அளித்தது. ஏற்கனவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த விஜயதரணி, பாஜகவிலும் பதவி அளிக்கப்படாத நிலையால் ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்.
பத்து மாதங்களுக்கும் மேலாக பொறுப்பின்றி இருப்பதால், தற்போது தவெகவில் இணையவுள்ளதாகவும், அவருக்கு அங்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் திமுக மற்றும் அதிமுகவில் இணையவும் முயற்சி செய்துவருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்றன.
இதை முற்றிலுமாக மறுத்துள்ள விஜயதரணி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "பாஜக தேசிய கட்சி என்பதால் பொறுப்புகள் தாமதமாக வந்தாலும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் பிரச்சார பணியில் முழுமையாக ஈடுபட உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Vijay BJP Ex MLA vijayadharani