இது போன்ற பொறுக்கிகளுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு யார் கொடுத்தது? கொந்தளிக்கும் தவெக லயோலா மணி! - Seithipunal
Seithipunal


திமுக மாணவரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், தவெக தலைவர் விஜய் அமரர் ஊர்தியின் ஓட்டுநர் இருக்காய் அருகே நிற்பதுபோல கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்க்கு தவெக லயோலா மணி கடும் கண்டனத்துடன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இது போன்ற பொறுக்கிகளுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு யார் கொடுத்தது?

மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி தரம் கெட்டு பதிவிடுவதற்கு அசிங்கமாக இல்லையா?

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காவல்துறையை வைத்து அடித்து கொலை செய்த கொலைகார கும்பல் என்று உங்கள் தலைவரின் புகைப்படத்தை சித்தரித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

எதற்கெடுத்தாலும் ஐயா கருணாநிதி அவர்களின் சமாதிக்குதானே மரியாதை செலுத்துகிறோம்,மரியாதை செலுத்துகிறோம் என்று போறீங்களே நீங்கள் சமாதி என்னும் சின்னதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் மாணவரணி பொறுப்பாளரே.

ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது கைக் கட்டி வேடிக்கைப் பார்த்த கேடுகெட்ட கும்பல். தமிழர்கள் துள்ள துடிக்க இறந்து கொண்டிருந்த போது டெல்லியில் சீட் பேரம் பேசிட்டு இருந்த மனிதாபிமானம் இல்லாத கும்பல்.

 ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை கைது செய்தும்,சிறைப்படுத்தியும் கொடுமைப்படுத்திய சர்வதிகார கும்பல் எங்களை கேலி செய்ய  துளியளவும் தகுதி கிடையாது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

தமிழ்நாடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?

உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுக்க பட்டுள்ளதா?

நேர்மையாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகளை என்னவென்று சொல்வது.

நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் வந்து அடக்குவது அயோக்கியத்தனம்.

குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றிய கும்பல்களுக்கு குறுக்கு புத்திதான் வரும்.

நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் மேன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK mani DMK Amuthan


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->