அ.தி.மு.க., பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதியதாக தோன்றியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 

இந்தக் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டவது மாநில மாநாட்டின் மீது தலைவர் விஜய் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஒரு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரிடம் கலந்துரையாடியுள்ளார். அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது:- "எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் உள்ளது. அ.தி.மு.க., பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk leader vijay says no alliance with admk and bjp for assembly election


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->