கரூர்: CM ஸ்டாலின் பொறுப்பாக செயல்பட்டார்! அ.தி.மு.க ஆட்சிக்கு வர விடமாட்டேன்... டிடிவி. தினகரன் பரபரப்பு பேட்டி!
TVK Karur ADMK Vijay AMMK TTV Dhinakaran
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், கரூர் விபத்து தொடர்பாக தவெகத்திற்கே தார்மீகப் பொறுப்பு உள்ளதாகக் கூறினார்.
அந்த பொறுப்பை விஜய் ஏற்றிருந்தால், நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவிக்காது எனவும் அவர் கூறினார். கரூர் சம்பவத்தைப் பற்றி சீமான் கூட நிதானமாகவும் சரியாகவும் பேசியுள்ளார். ஆனால் பதவி ஆசையில் எடப்பாடி பழனிசாமி வாதமிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி எதையும் செய்வார், ஆனால் அமமுக அவரை எதிர்கொண்டு வீழ்த்தாமல் விடாது என்றார்.
பழனிசாமி தரம்தாழ்ந்து பேசுவது வருத்தமளிக்கிறது; அவர் அப்படித்தான் பேசுவார் என்பதும் தெரியும் என்ற டிடிவி தினகரன், அதிமுக மீதும் பாஜக மீதும் தனக்கு பகை இல்லை, பிரச்னை பழனிசாமியுடன்தான் என அவர் தெளிவுபடுத்தினார்.
கரூர் சம்பவத்தில் முதல்வர் பொறுப்புணர்வோடும் நிதானமாகவும் செயல்பட்டதாக தினகரன் பாராட்டினார். தவெக வாதங்கள் பொறுப்பற்றதாகவே தெரிகின்றன என்றார்.
அண்ணாமலை பேசிய விதம் நண்பராகவே வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். இது சதி அல்ல, விதி காரணமாகவே நடந்த துயரச்சம்பவம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
தமிழக மக்கள் ஜாதி மதம் கடந்தே பார்ப்பார்கள். திமுகவுக்கு ஆதரவு தரவில்லை என்றாலும், கரூர் விவகாரத்தில் சரியாக செயல்படுகிறது.
தவெக திட்டமிட்டு செய்யவில்லை; அனுபவக் குறைவால் நிகழ்ந்த விபத்து தான். ஆனால் பாஜக இதை அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றும் தினகரன் தெரிவித்தார்.
English Summary
TVK Karur ADMK Vijay AMMK TTV Dhinakaran