கட்டுமரக் கதை... சிறை சென்ற தியாகி.. உங்க போலி பிம்பம் உடைந்ததால் பதற்றமா மு.க.ஸ்டாலின்? தவெக ஐடி விங் பதிலடி! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சாடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு, மாநில அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மிசா சிறைவாசம், சர்க்காரியா கமிஷன் விவகாரம், தற்போதைய தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் தனிப்பட்ட சந்திப்பில் பேசப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டு ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட 'சிறை சென்ற தியாகி' என்ற போலி பிம்பம் உடைந்ததில் ஏற்பட்ட பதற்றத்தின் விளைவே இந்த வீடியோ பதிவு" என தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.

மஞ்சள் துண்டு தந்தை காலம் தொட்டு வாரிசுகள் வரை எதை உலகிற்குத் தெரியக் கூடாது என்று மறைத்து அடைகாத்தார்களோ, அது தற்போது அம்பலமாகிவிட்டதால் எதிர்த்தரப்பில் அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது என தவெக சாடியுள்ளது. இத்தனை நீளமாக வீடியோவில் பேசிய மு.க.ஸ்டாலின், தனது 'கைது ஆணை' (Detention Copy) பற்றி மட்டும் ஒரு வார்த்தைகூட மூச்சுவிடாதது ஏன் என்றும் தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவைக் கேலி செய்துள்ள தவெக, "உண்மைக்கு எந்தவித விளம்பரங்களோ அல்லது விளக்கங்களோ தேவையில்லை. ஆனால், பல கட்கள் (cuts) செய்யப்பட்டு, எவ்வித உணர்ச்சியுமின்றி வெளியாகி இருக்கும் இந்த ஷூட்டிங் வீடியோவே, அவர்களின் பொய்ப் பிம்பம் உடைந்துபோனதை உறுதிப்படுத்துகிறது. மீண்டும் ஒருமுறை உண்மைக்கு மாறான ஒன்றை மக்களை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே இது தெரிகிறது" என்று சாடியுள்ளது.

கட்டுமரக் கதைகளாலும் கற்பனைகளாலும் தற்காலிகமாகக் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பங்கள், மெய்யான வரலாற்று உண்மைகளின் முன் ஒருபோதும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளதாக தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தவெக முகாமிற்கு இடையே வெடித்துள்ள இந்த நேரடி வார்த்தை மோதல், தமிழக அரசியல் களத்தில் மேலும் சூட்டை ஏற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK IT Wing Hits Back at DMK Chief MK Stalin Over Critical Video on CM Vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->