"வீட்டில் சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?" முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் காட்டமான வீடியோ பதிவு - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சாடி ஒரு காரசாரமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு தன்னை நேரில் சந்தித்த நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், முதலமைச்சரின் தற்போதைய அரசியல் அணுகுமுறை குறித்தும், சட்டப்பேரவையில் அவர் பேசிய பேச்சுகள் குறித்தும் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் தனது அரசியல் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், "மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தோம். அப்போதைய கொடூரத் தாக்குதலில் எனது தாடை எலும்பு முறிந்தது; அருமை அண்ணன் சிட்டிபாபு உயிர்த்தியாகம் செய்தார். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதும் அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. சந்தேகம் இருந்தால் சட்டசபை நூலகத்திற்குச் சென்று எனது போராட்ட வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்க்காரியா கமிஷன் மற்றும் தலைவர் கலைஞர் குறித்து முதலமைச்சர் விஜய் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகச் சாடியுள்ளார். அமலாக்கத்துறை தொடரும் 95 சதவீத வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு ஏவப்பட்டு, நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் ரத்தாகின்றன என்ற உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"என்னை நேரில் சந்தித்தபோது, தேர்தல் கள விமர்சனங்களுக்கு வருத்தம் தெரிவித்தீர்கள். அப்போது, 'நீங்கள் இப்போது மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்தோடு பேசுங்கள்' என்று அறிவுறுத்தினேன். அதை முழுமையாக மறந்துவிட்டுச் செயல்படுவது ஏனோ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் வீழ்ந்துள்ளதாகவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் சோஷியல் மீடியா ரீல்ஸ்கள் மூலம் ஒரு தலைமுறையையே திசைதிருப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், சட்டமன்ற மாண்பைக் காக்குமாறும், தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்திற்காக மக்களைக் கைவிடாமல் திமுக தொண்டர்கள் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK President MK Stalin Slams CM Vijay Over Assembly Statements and Governance Record


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->