த.வெ.க: 15 மணி நேரத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள்.! வெளியான அதிர்ச்சி தகவல்!
TVK 20lakhs members join15 hours
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நேற்று மாலை 5.30 மணி அளவில் தொடங்கியிருந்த நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான வாட்ஸாப், டெலிகிராம், இணையதளம் போன்றவற்றிற்கான க்யூ ஆர் கோடு மற்றும் லிங்க்குகளை த.வெ.க தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்ததால் தாமதமாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை முதல் நாளில் 5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK 20lakhs members join15 hours