3 தொகுதிகளில் இழுபறி...! - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா...? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் சூழலை சூடேற்றியுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் வேகம் பிடித்துள்ளது. வரும் 6-ஆம் தேதி இறுதி நாளாக நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாதது கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் பரபரப்பின் மையமாக மாறியது. வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.

அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழகத்தின் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய செல்வப்பெருந்தகை, “85 சதவீத வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்; மீதமுள்ள 15 சதவீதத் தேர்வு இறுதி கட்டத்தில் உள்ளது. எந்த பெரிய தடையும் இல்லை; இன்று அறிவிப்பு வெளியாகும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஆனால் மேலூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர் தேர்வில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அந்த தொகுதிகளுக்கான மூன்று பேர் பெயர்கள் தேர்வு செய்து, இறுதி ஒப்புதலுக்காக கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இறுதி முடிவு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்று மாலைக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளிவரும் என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tug of war 3 constituencies Congress candidate released today


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->