இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அன்னாருக்கு இதய அஞ்சலி - டிடிவி தினகரன்.!
ttv say about immanuvel sekaran
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவரும், தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான இம்மானுவேல் சேகரன் அவர்களின் 64-ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்ற இம்மானுவேல் சேகரன் மக்களின் உணர்வோடு கலந்தவர். வசதியாக வாழ வாய்ப்புகள் இருந்தும் அவற்றை துறந்து விட்டு தமது மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவர் இம்மானுவேல் சேகரன்.

இம்மானுவேல் சேகரனின் தியாகம் இன்னும் உரிய வகையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற தங்கம் பலருக்கும் உள்ளது. அவரது நினைவு நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில்,
"மிகப்பெரிய சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு முனைப்புடன் பாடுபட்ட திரு.இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அன்னாருக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவு கூர்வோம்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv say about immanuvel sekaran