வேன் ரெயில் விபத்து : உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்! - இபிஎஸ்
Van train accident I urge DMK government to provide appropriate compensation deceased students EPS
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டதாவது,"கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Van train accident I urge DMK government to provide appropriate compensation deceased students EPS