ஃபார்மசி  மின் இணைப்பை துண்டித்து அராஜகம்..தனியார் மருத்துவமனை இயக்குனர் மீது பெண் புகார்!  - Seithipunal
Seithipunal


தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ₹36 கோடி மதிப்புள்ள கடனுக்கு உத்தரவாததாரராக கையொப்பமிடும்படி, தொடர்ந்து அழுத்தம் செலுத்தி, கடுமையான வார்த்தைகளால் மிரட்டுகிறார் என பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து நான் திருமதி பி. சங்கீதா,  அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:இம்மூலம் ஒரு முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நான் திரு பிரபு என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையை தொடங்கி, சுகாதார சேவைக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தேன். ஆனால் தற்போது, அவர் எனக்கு தெரியாமலே, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ₹36 கோடி மதிப்புள்ள கடனுக்கு உத்தரவாததாரராக கையொப்பமிடும்படி, தொடர்ந்து அழுத்தம் செலுத்தி, கடுமையான வார்த்தைகளால் மிரட்டுகிறார்.

மேலும், இந்தக் கடனின் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த தொகை சுமார் ₹70 கோடி ஆகும் என்றும், அதிலிருந்து கையில் பெறப்படவிருப்பது ₹16 கோடியே என்றும் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒப்பந்தத்தில் எனது எந்தவொரு பங்கு அல்லது சம்மதமும் இல்லாமல், என்னை சட்டவிரோதமாக வற்புறுத்துவதும், உடல் பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அச்சுறுத்துவது என்பது மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது எனது பாதுகாப்புக்கும் மனஅமைதிக்கும் பெரும் பாதிப்பாக இருக்கின்றது.

எனவே, உங்களது உயர்ந்த அலுவலகம் இவ்வழக்கை தீவிரமாகக் கணிப்பில் கொண்டு, எனது உயிர் மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். மேலும், எனது அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நிதி ஒப்பந்தத்திற்கும் எனக்கு பொறுப்பில்லை என்பதை உறுதிப்படுத்தி, நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நீதியின் மேல் எனக்குள்ள முழுமையான நம்பிக்கையுடன், இந்த மனுவை விரைவில் பரிசீலித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உங்களது ஆதரவை பணிவுடன் வேண்டுகிறேன் என திருமதி பா. சங்கீதா கூறியுள்ளார்.


இதேபோல காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில் சங்கீதா கூறியிருப்பதாவது:மேல் குறிப்பிட்ட முகவரியில் எனது நிறுவனம் பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருகின்றேன்.நான் மேற்படி மருத்துவமனையின் ஒரு இயக்குனராகவும் எனது கணவர் ஒரு இயக்குனராகவும் மூன்று வருடமாக அரும்பாடுபட்டு செயல்பட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் எமது மருத்துவ மனைக்கு போதிய பணம் திரட்ட பலரிடமும் உதவியை நாடி பண உதவிகள் செய்தும் உள்ளேன். பின் .....என்பவரே மூலம் பண உதவி செய்வதாக வந்த திருமதி பத்மா என்பர்  என்னைப்பற்றி இல்லாத பொல்லாத வார்த்தைகளை கூறி  கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் நிர்வாக பொறுப்பு ஏற்று என்னை வெளியேற்ற திட்டமிட்டு அந்த திட்டத்துக்காக கிடைக்காத கடன் வாங்கி தருவதாக போலி நாடகம் ஆடி என்னையும் எனது கணவரையும் 36 கோடி கடன் வாங்குவதாகவும் அதற்கு 10 கோடி மருத்துவ பெயரில் வாங்கும் இடத்திற்கு மற்றும் 20 கோடி பில்டர் வாங்கும் இடத்துக்கும் சேர்த்து 36 கோடிக்கான பத்திர பதிவு செலவும் பின் மீதம் உள்ள 6 கோடி மட்டுமே மருத்துவ மனை செயல் படுத்த தருவதாகவும் மேலும் 36 கோடிக்கு 5% கமிஷன் தர வேண்டும் எனவும் கூறியதற்கு மறுத்த காரணத்தால் என்னையும் எனது கணவரையும் கொலை செய்வதாக பத்மா அவர்களும் அவர்களின் கும்பலுடன் மருத்துவர் பிரபுவும் என்னை மிரட்டி வருகிறார். இதற்கான ஆதாரம் கைபேசியில் பதிவு செய்து உள்ளேன்.

மேற்படி எனது சொந்த மருந்தகத்துக்கு நான்  கடை வாடகைக்கு எடுக்கும் போது தனி மின் இணைப்பு கேட்டு இருந்தேன் அப்போது எனக்கு தரப்பட்ட மின் இணைப்பை நான் சமீபத்தில் வியாபார ரீதியாக வெளி ஊர் மற்றும் வெளிநாடு சென்ற நேரத்தில் எனக்கு தெரியாமல் மருத்துவ மனையுடன் இணைத்து மின் இணைப்பு கொடுத்து என்னை திருட்டு மின் இணைப்பு எடுத்ததாக  திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார்கள்.

தற்போது இரண்டு நாட்களாக மின் இணைப்பு இல்லாமல்  உயீர்காக்கும் மருந்துக்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளது.மேற்படி சம்பவம் சம்மந்தமாக அம்ஞ்சிக்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் எமது புகாருக்கு CSR கூட தராமல் சிரமபடுத்தியதால் சண்டைபோட்டு 1 புகாருக்கு மட்டும் CSR தந்தார்கள் மற்ற புகார்களுக்கு CSR தராமல் என்னை மிரட்டி வருகின்றார்கள். ஆகவே எமது புகாரை  உதவி ஆணையர் அந்தஸ்து உடைய ஒருவர் விசாரணை நடத்தி எனக்கு மின் இணைப்பு பெற உதவிடவும் மேலும் என் உழைப்பை கொடுத்து உயர்த்திய மருத்துவமனைக்கு உள் இருக்கும் மருந்தகத்துக்கு சொந்தமான மருத்துவ உபகரணங்களை மீட்டு தரவும், மேலும் மருத்துவ மனையில் இருந்து மருத்துவர் பிரபு விகியுள்ளதால் மருத்துவமனையில் இருந்து பத்மா கும்பலை வெளியேற்றி எனக்கு மருத்துவமனையில் செயல்பட முழு சுதந்திரம் கிடைக்கவும், பின் மருத்துவருக்கும் எனக்கும் இடையில் உள்ள பண பரிவர்த்தனையை கணக்கு உரிய தணிக்கை செய்து ஒப்படைக்க போதிய சட்ட ஆலோசகர் மற்றும் தணிக்கையாளர்கள் மூலம் ஒப்படைக்க வழிவகை செய்து தரவும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pharmacy electric connection cut off chaos Woman files complaint against private hospital director


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->