த.வெ.க. விஜய் என்றாலே தி.மு.க.வுக்கு அலர்ஜி: டி.டி.வி. தினகரன் சாடல்
TTV Dinakaran DMK BJP tvk vijay
த.வெ.க. தலைவர் விஜய்யைப் பற்றி தி.மு.க.வினர் பேசுவதிலிருந்து, அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்றால் அலர்ஜி என்பது தெரிவதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்தாவது, "எஸ்.ஐ.ஆர். பணி: 95 சதவீதம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் பகுதியில் வாக்குரிமை பெற்றுத் தரும் கடமையைச் செய்து வரும் நிலையில், எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை. மத்திய எஸ்.ஐ.ஆர். பணி சரியாகத்தான் நடைபெறுகிறது.
நெல் கொள்முதல்: நல்ல விளைச்சல் இருந்தும், மழையால் நெல் அறுவடை பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22% ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தி.மு.க.வின் கோரிக்கை அல்ல, விவசாயிகளின் கோரிக்கை.
மெட்ரோ அரசியல்: கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்பது மக்களின் தேவை. மாநில அரசு கேட்டால் மத்திய அரசு உதவ வேண்டும். "நான் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவேன்" என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது, மக்கள் தேவையை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவது போல் உள்ளது.
சட்டம்-ஒழுங்கு: சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், போதைப் பொருள் பழக்கத்தால் அதிகரித்து வரும் கொலை, கொள்ளையைத் தடுக்காவிட்டால், அது தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரொலிக்கும்.
கூட்டணி: கூட்டணி குறித்துத் தங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது உறுதியான பின் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
TTV Dinakaran DMK BJP tvk vijay