செய்யாறு கொடுரம்: “குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும்?” - டிடிவி தினகரன் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி, அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு மீது விமர்சனம்: தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமுமின்றிச் சுற்றித் திரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அலட்சியப் போக்கு 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' போன்ற விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஏமாற்றும் திமுக அரசு, பெண்களின் உண்மையான பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதை இச்சம்பவம் தோலுரித்துக் காட்டுகிறது எனச் சாடியுள்ளார்.

கடந்த கால ஆட்சி ஒப்பீடு ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததையும், தற்போது அந்த நிலை மாறி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை தேவை: இச்சம்பவத்தில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ttv Dinakaran condemn to DMK mk Stalin


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->