இந்த திமுகவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் - சற்றுமுன் டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை தற்போது தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர்., மீண்டும் அவர்களுக்கு வாக்களித்து அந்த தவறை செய்ய வேண்டாம் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில்,

"பண மூட்டைகளுடன் அலைகின்ற கட்சிகள், பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்று அலைவார்கள். ஏற்கனவே திமுக ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்று தெரியும்., தற்போது அவர்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு வாரியாக திமுக வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால்., ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று., திமுகவை வெற்றிபெற அனுமதித்தால்., மிகப்பெரிய அழிவில் முடியும். 

இதனை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் சொத்துக்களை, அரசு சொத்துக்களை சுரண்டாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் காசுக்காக வாக்களிக்காமல், நல்ல வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தாலும் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை வாய்ப்பு தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட செய்திருக்கிறோம். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் மூலம் இந்த நேரத்தில் நான் கோரிக்கை வைக்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN SAY ABOUT DMK LOCAL BODY ELECTION


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->