டெல்டாவில் கனமழை, அறுவடை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - இழப்பீடு கோரும் டிடிவி தினகரன்!   - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில, கடந்த சில நாட்களாக காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன.

ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது.

எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Delta Heavy Rain Fall Farmers issue 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->