கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மகிழ்ச்சியில் உறைந்த மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தேர்தல் பிரச்சார பணிகளுக்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜூன் இரண்டாம் தேதி சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

இதற்கிடையே ஜாமீன் வழங்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைப்பது உதவிகரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kejriwal interim bail Mamata Banerjee happy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->