அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில்...! - ரங்கசாமி பேட்டி - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரங்கசாமி பேட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ரங்கசாமி:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.

இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.

தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran election campaign support AIADMK candidates Rangasamy interview


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->