கலகலத்துப் போய் இருக்கும்.. சுயநலம் தான் காரணம்.. மதுரையில் எகிறிய டிடிவி தினகரன்..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்பொழுது பேசிய அவர் "பழனிச்சாமி என்ற ஒற்றை மனிதரும் அவரைச் சார்ந்த ஒரு சிலரின் ஆணவம், அகம்பாவம், ஆட்சி அதிகாரம் இருந்ததால் கிடைத்த வரவின் காரணமாக இருந்த திமிர் இதுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். உச்ச நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை கொடுக்கவில்லை என்றால் மேற்கு மண்டலம் எங்களின் கோட்டை என சொல்வது கலகலத்து போயிருக்கும்.

திமுகவிற்கு இணையாக அவர்களும் பொருட்செலவு, பணச்செலவு செய்தும் இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் இன்னும் மோசமான நிலையை எட்டி இருப்பார்கள். 

தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த அதிமுகவை கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்த பழனிச்சாமியின் மோசமான நிர்வாகத்தின் காரணமாக மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

இரட்டை இலை இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி இந்த அளவுக்கு பாடுபடுகிறார். வருங்காலத்தில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து திமுக என்ற தீய வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.

ஒரு சிலரின் சுயநலம் அதற்கு தடையாக இருந்திருக்கலாம். அந்தத் தடைகள் எல்லாம் கூடிய விரைவில் உடைத்து எரியப்படும். அதிமுகவில் இந்த தொடர் தோல்விக்கு பழனிச்சாமி தான் காரணம். 

ஆட்சி அதிகாரத்தில், பண அதிகாரத்தில், மத்திய அரசின் தயவால் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அதை பலர் ராஜதந்திரம் என புகழ்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ இருந்தாலும் ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும்.

கட்சியில் இருப்பவர்கள் அனைவரையும் வசப்படுத்தி வைத்துள்ளதால் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வர அவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. துரோகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைமை பதவிக்கு அதே துரோகத்தால் ஒருவர் தலைமை பொறுப்பில் அமர இருப்பதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran accused EPS as cause of AIADMK series of defeats


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->