டிரான்ஸ்பார்மர் முறைகேடு:மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் நோக்கில் விஜிலென்ஸ் நடவடிக்கை இல்லை...!
Transformer scam No vigilance measures to protect peoples representatives
தமிழ்நாட்டில் முறைகேடு செய்ததாக டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் புகார் எழுந்தது.இதில் அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக நிர்வாகி, ரூ.397 கோடி இழப்பு தொடர்பாக வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.இதில் 2021-23 வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்கள் பிரதிநிதி, அரசுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரில் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விஜிலென்ஸ் நடவடிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Transformer scam No vigilance measures to protect peoples representatives