துரோகி! கீழடி பேச தகுதியற்ற எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார்...! - முதலமைச்சர் தாக்கு - Seithipunal
Seithipunal


திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க.வை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்க போகிறாராம்.

பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ். துரோகம் செய்வது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது. ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ். தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.

கீழடி என்றால் கீழே படுத்து செல்வது மட்டும்தான் இ.பி.எஸ்.-க்கு தெரியும். பா.ஜ.க.வின் ஒரிஜினல் குரலாக பேச ஆரம்பித்து விட்டார் இ.பி.எஸ். பழனியாண்டவர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை மயக்கத்தில் போய் திறந்து வைத்தாரா இ.பி.எஸ். கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு எப்படி பயணம் மேற்கொள்கிறார் இ.பி.எஸ். கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது அறநிலையத்துறை சட்டத்திலேயே உள்ளது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் இ.பி.எஸ்" என்று தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Traitor Edappadi who is not fit to speak is shouting over money given by Palaniswami Chief Minister attacks


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->