சோம்பல் இருக்கும்போது இந்த கோதுமை கலாகலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
When youre at boaring eat this wheat sweet recipe
கோதுமை கல கலா (இனிப்பு)
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கோதுமை மாவு - கால் கிலோ
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 150 கிராம்

செய்முறை :
முதலில்,சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதனுடன் கோதுமை மாவு, சமையல் சோடா, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை பூரி கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து கத்தியால் சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த துண்டுகளை போட்டு பொன்னிறமானதும் இறக்கி விட வேண்டும். சுவையான இனிப்பு கோதுமை கல கலா ரெடி...
English Summary
When youre at boaring eat this wheat sweet recipe