ஓடும் ரெயிலில் இறங்கிய பயணி - நொடி பொழுதில் பாதுகாப்பு படைவீரர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!!
passanger fell down from train in erode
கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே 'டீ' வாங்குவதற்காக ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் தவறி விழுந்தார். உடனே அவர் ரெயிலின் படிக்கட்டு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டதால், சிறிது தூரம் நடைமேடையிலேயே இழுத்து செல்லப்பட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபிக் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, துரிதமாக செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபிக்கிற்கு அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
passanger fell down from train in erode