ரெயில்வே ஊழியர் சஸ்பெண்ட்! டிக்கெட் கொடுக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் காண்டான பயணிகள்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் ரெயில் நிலையம் ஒன்றில் டிக்கெட் கவுண்டரில் ஊழியராக வேலைப்பார்த்து வருபவர் மகேஷ். இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது,பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க இருந்த அவர், பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் யாரிடமோ அரட்டை அடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் நாற்காலியில் பொறுப்பில்லாமல் ஹாயாக படுத்துக்கொண்டும் பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.இதனைக் கண்ட டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கோபம் கொண்டனர்.மேலும், ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

அப்போது பயணிகள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கிருந்த பயணிகளில்  சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

அதன் பிறகு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோவில்," ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். இன்னமும் டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். எங்களுக்கு நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று தெரிவிக்கிறார்.

நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railway employee suspended Passengers were left fuming because they were chatting without giving tickets


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->