மாதத் தொடக்கத்தில் வணிக சிலிண்டர் விலை கணிசமாக குறைந்தது!
At the beginning of the month the price of commercial cylinders has significantly decreased
சென்னை:2025-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் வணிக ரீதியிலான சமையல் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது ஏற்றுக் கொள்ளத்தக்க நிவாரணமாக கருதப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கும் வணிக பயன்பாட்டிற்குமான சமையல் சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகித்து வருகின்றன.
விலை நிர்ணயத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் சிலிண்டர் விலைகள் மாற்றப்படுவது வழக்கம்.

இம்மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி:சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ₹1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹888.50- க்கு விற்பனை தொடர்கிறது.
2023 டிசம்பரில் வணிக சிலிண்டர் விலை ₹1,980 ஆக இருந்தது. அதிலிருந்து மொத்தம் ₹201 வரை விலை குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மார்ச் மாதத்தில்தான் ₹5.50 உயர்வு காணப்பட்டது; மற்ற மாதங்களில் தொடர்ச்சியான விலை குறைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
At the beginning of the month the price of commercial cylinders has significantly decreased