14 வயது சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
14-year-old girl gets life sentence for the perpetrator in a sexual case POCSO court verdict
திருச்செந்தூரில் 14 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 43 வயதான காயல்பட்டினத்தைச் சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனையும் ₹10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்துமகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜெயசிங் (43) என்பவர் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து வழக்கை பதிவு செய்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நேற்று (31.07.2025) விசாரணை முடிவில், நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கியபோது,குற்றவாளி ஜெயசிங்குக்கு ஆயுள் தண்டனை,மேலும் ₹10,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்.
வழக்கை திறம்பட விசாரித்த முன்னாள் இன்ஸ்பெக்டர் சாந்தி,நீதிமன்றத்தில் வழக்கை வெற்றிகரமாக வாதிட்டு தண்டனை பெற்றுத் தந்த அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி,விசாரணை பணியில் உதவிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லிங்ககனி ஆகியோரையும்தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேரில் பாராட்டியதாக போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 30.6.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கோவில்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்றுகோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
14-year-old girl gets life sentence for the perpetrator in a sexual case POCSO court verdict