யாருக்கு தெரியும் ஒரு நாள் இந்தியாவுக்கே கூட பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்...! - நக்கலடித்த டிரம்ப்
Who knows one day India might even be buying oil from Pakistan Trump mocks
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 % வரி விதித்து அறிவித்துள்ளார்.இதில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் கச்சா எண்ணெய்கள் பெருமளவில் இந்தியா வாங்குவதால் இதற்கு டிரம்ப் 25 % வரி விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி,புதிய வரிவிதிப்பு ஆகஸ்ட் முதல் அமலுக்கு வருகிறது.இதனிடையே,பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக தற்போது டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப்:
இதுகுறித்து டிரம்ப் தெரிவித்ததாவது," பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம்.அவ்வகையில்,பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள உள்ளோம்.
இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு வருகிறோம்.யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என்று டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பல விமர்சனங்களை பகிர்ந்தும் வருகின்றனர்.
English Summary
Who knows one day India might even be buying oil from Pakistan Trump mocks