பீகார் வாக்குச்சாவடிகளில் கூட்டம் கூட்டமாக...! - காலை 9 மணிக்கே 14.55% வாக்குகள் பதிவு...!
Crowds at Bihar polling booths 14point 55 percentage voting recorded at 9 am
பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல், இரண்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில், முதற்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 65.08 சதவீதம் என்ற சாதனை வாக்கு வீதம் பதிவானது.

இப்போது மீதமுள்ள 122 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. மக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, தங்கள் ஜனநாயக உரிமையை ஆற்றும் காட்சிகள் மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டன.தேர்தல் ஆணையம் வெளியிட்ட காலை 9 மணி நிலவரப்படி, 14.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்.
20 மாவட்டங்களைச் சேர்ந்த இந்த தொகுதிகளில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 45,399, வாக்காளர்கள் 3 கோடி 70 லட்சம் பேர் எனப் பெரிய அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. பீகாரில் யார் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பது அந்த நாளில்தான் வெளிச்சத்துக்கு வரும்.அதேநாளில், பல மாநிலங்களிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.
English Summary
Crowds at Bihar polling booths 14point 55 percentage voting recorded at 9 am