எஸ்.ஐ.ஆர். திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்...! - தி.மு.க. கூட்டணி கட்சிகள் சாலைமுழுவதும் ஆர்ப்பாட்டம்...!
SIR project should cancelled DMK Alliance parties protest all over road
அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் "எஸ்.ஐ.ஆர்." எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தொடங்கியுள்ளது. ஆனால், இதே நடவடிக்கையை “அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது” என குற்றம்சாட்டி, தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

சென்னையின் தங்கசாலை பகுதியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலச்சந்திரன் சண்முகம், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
அதேவேளை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில், “எஸ்.ஐ.ஆர். திட்டத்தை ரத்து செய்”, “தேர்தல் ஆணையம் நியாயமாக நட” போன்ற கோஷங்கள் முழங்கின. பங்கேற்றவர்கள் பதாகைகள், கைதடிகள் ஏந்தி வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் – அரசியல் பெருக்கம் என்ற நிலை தற்போது தமிழகம் முழுவதும் உருவாகியுள்ளது.
English Summary
SIR project should cancelled DMK Alliance parties protest all over road