உயிரிழந்தார் எனப் பரப்பியது பொய்...! தர்மேந்திரா மரண வதந்திக்கு ஹேமமாலினி, ஈஷா தியோல் கடும் பதில்...! - Seithipunal
Seithipunal


இந்தி திரையுலகின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய நடிகர் தர்மேந்திரா தற்போது 89 வயதைக் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை சற்றே பாதிக்கப்பட்டதால், மும்பையின் பிரபலமான ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் இன்று காலை முதல் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் “தர்மேந்திரா காலமானார்” என்ற செய்தி மின்னல் வேகத்தில் பரவியதால், முழு பாலிவுட் துறை அதிர்ச்சியில் மூழ்கியது. ரசிகர்களிடையே துக்கம் பரவிய நிலையில், சில நிமிடங்களில் அந்தச் செய்தி பொய்யானது எனத் தெரியவந்தது.

இதற்கு முன்னதாக, அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தர்மேந்திராவின் குடும்பத்தினர் அதற்கு தெளிவான மறுப்பு தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, நடிகர் தர்மேந்திராவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, தன் X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் கடும் கண்டனத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அவரது பதிவில் குறிப்பிட்டதாவது,"நடப்பது முற்றிலும் மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு பதிலளித்து மெதுவாக குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி, பொறுப்புள்ள ஊடகங்கள் இப்படிப்பட்ட பொய் செய்திகளை எப்படி வெளியிட முடியும்? இது மிகுந்த அவமரியாதையானதும், பொறுப்பற்ற செயலாகும். எங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".

இதேபோல், தர்மேந்திராவின் மகளும் நடிகையுமான ஈஷா தியோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,“என் தந்தை நலமாக உள்ளார். அவர் மெதுவாக குணமடைந்து வருகிறார். அவரது உடல்நலத்துக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி".இந்த விளக்கத்துடன், தர்மேந்திரா உயிருடன் இருப்பதும், அவரது உடல்நிலை மேம்பட்டுவருவதாகவும் உறுதியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் நிம்மதி மூச்சு விட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rumor that Dharmendra has died is lie Hema Malini Esha Deol give strong response rumor Dharmendra death


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->