நூறு ஆண்டுகளாக கோழி சத்தம் கூட கேட்டதில்லை! கோழி கறி சாப்பிடாத வினோத ஊர்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் அனந்தபுரம் மாவட்டத்தில் குண்டூர் பி அருகே தம்மையா டோடி கிராமம் இருக்கிறது.அந்த கிராமத்தில் மொத்தமாக 450 பேர் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த கிராமத்தில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா ஒன்று நடந்தது.அந்த கோவில் திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் கோழிகளை பலியிட்டு பூஜை செய்ததாகவும்,இதனைக் கண்ட அந்த கிராமத்து பெரியவர்கள் கோபம் கொண்டார்களாம்.

அதனால் அவர்கள் இனி இந்த கிராமத்தில் யாரும் கோழி வளர்க்க கூடாது என்றும் கோழிக்கறியை சாப்பிடக்கூடாது என்றும் தடை விதித்தார்களாம்.இதன் காரணமாக, அந்த ஊரில் வாழ்பவர்கள் யாரும் கோழியை வளர்ப்பது இல்லை.

கோழிகள் வளர்க்கப்படாததால் அந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாக சேவல் கூவும் சத்தம் கூட கேட்டதில்லை என்று தெரிவிக்கின்றனர்.அதற்கு மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

அவர்களின் இறைச்சி உணவிற்கு ஆட்டுக்கறியை மட்டும் சாப்பிட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strange town that hasnt even heard chicken sound hundred years


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->