வந்துடுச்சு புதிய விதிமுறைகள் - GPay, PhonePe, Paytm -ல் இனி இதை செய்யவே முடியாது.!!
new rules effect from tomorrow in upi transection
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அவை என்னவென்று இந்த பதிவில் காண்போம்.
* GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
* உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.

* ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்த நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும்.
* ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும்.
English Summary
new rules effect from tomorrow in upi transection