அரசு கல்லூரிகளில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in government colleges
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இந்தப் பதிவில் காண்போம்.
கல்வித்தகுதி:- முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Ph.D, அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.
வயது வரம்பு:- 57 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விபரம்:- மாதம் ரூ.25,000 சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை:- நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மற்றும் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அதற்கேற்ப https://tngasa.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.200 ஆகும். SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாகவே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
English Summary
job vacancy in government colleges