முகச்சுருக்கம் நீங்க, பேன் தொல்லை நீங்க இந்த வெங்காயம் டிப்ஸ் உதவியாக இருக்கும்!
These onion tips will help you get rid of wrinkles and lice
முகச் சுருக்கம் நீங்க:
வெங்காயம் சிறந்த கிருமிநாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிறு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச் சாறை முகத்தில் தடவி 5 நிமிடங்களுக்கு காயவிட்டு கழுவிக் கொள்ளலாம்.வெங்காயத்தை மசித்து நாலு சொட்டு தேன் விட்டு ‘பேக்‘ போட்டுக் கொண்டால், முகச் சுருக்கம் நீங்கும்.

பேன் தொல்லை நீங்க:
வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளித்தால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும்.
முடி அடர்த்தியாக:
வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம்.இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
English Summary
These onion tips will help you get rid of wrinkles and lice