ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கப்போகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. கலக்கத்தில் திமுக அமைச்சர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சந்திக்க உள்ளார்.

பி ஜி ஆர் எனர்ஜி நிறுவன விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். எண்ணூர் அனல் மின்நிலையம் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான பி ஜி ஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழக அரசு வழங்கியது. 

இதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பி ஜி ஆர் எனர்ஜி நிறுவனத்தில் சோதனை நடத்த வேண்டும் என கூறினார். ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை திமுக அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்க உள்ளார். பி ஜி ஆர் எனர்ஜி நிறுவனம் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today bjp annamalai meet governor rn ravi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->