இன்றும் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 2022-2023 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்தநாள் 19ஆம் தேதி வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, கடந்த 3 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது முதல் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். விருதுநகர் பாலியல் குற்றத்தை கண்டித்து பேரவையில் அதிமுக அமளி செய்தனர்.  பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக அதிமுக குற்றசாட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today AIADMK MLAs Walk Out on Assembly


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->