சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:

"தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்".

மேற்காணும் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களின் கடிதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பினை அரசிற்கு அனுப்பியுள்ளார். இச்செயற்குறிப்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தினை செயல்படுத்திட உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோருவதற்கு முன்மொழிவதாகவும், அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியின் 29,455 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கு சிற்றுண்டி தாங்கிப்பட்டி (Tiffin Carrier) கொள்முதல் செய்வதற்கும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் பெருநகர சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்வதற்கும் ஆகும் செலவினம் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மன்றத்தின் பின்னேற்பு அனுமதி எதிர்நோக்கி பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தைத் (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கான செலவினத் தொகை ரூ.186,94,22,969/-க்கு அரசின் நிர்வாக அனுமதியினை கோரியுள்ளார். மேலும், இப்பணிக்கான செலவினத் தொகையினை அரசு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அளிக்கும் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து பெறுவதற்கான அனுமதியையும் கோரியுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் செயற்குறிப்பினை அரசு கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ரூ.186,94,22,969/- (ரூபாய் நூற்று எண்பத்து ஆறு கோடி தொண்ணூற்று நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது மட்டும்) மதிப்பீட்டில் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் பின்னேற்பு அனுமதி எதிர்நோக்கி அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடுகிறது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு இவ்வாணையின் இணைப்பில் உள்ள பொதுவான வழிகாட்டுதல்களை நிர்ணயம் செய்தும் அவற்றைத் தவறாமல் பின்பற்றுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்யுமாறும் அரசு ஆணையிடுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Order Sanitary workers morning foods fund


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->