ரூ. 45 கோடி மதிப்பில் 5,460 தங்க நாணயங்கள் தமிழக அரசு!
TNGovt Gold Coin Free marriage
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசின் நிதியுதவித் திட்டங்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 காரட்டில் மொத்தம் 5,640 தங்க நாணயங்கள் ரூ. 45 கோடி மதிப்பில் வாங்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு இன்று (செப். 10) முதல் அக்டோபர் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNGovt Gold Coin Free marriage