மத மாற்றம்.. கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல்.. CM ஸ்டாலின் கண்டனம்!
TNCM MK Stalin Minorities kerala issue
மத மாற்றத்துக்கான புகாரின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.
வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.
இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்" என தெரிவித்துள்ளார்.
English Summary
TNCM MK Stalin Minorities kerala issue