காந்தா படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஒட்டி சிறப்பு போஸ்டர்!
Announcement from team Kantha Special poster occasion Dulquer Salmaans birthday
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் 'துல்கர் சல்மான்'.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' என்ற படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.அதைத் தொடர்ந்து செல்வணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ''காந்தா'' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,இன்று நடிகர் துல்கர் சல்மானின் 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காந்தா படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இதனை சிறப்பிக்கும் வகையில் ''காந்தா'' படத்தின் டீசரை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
English Summary
Announcement from team Kantha Special poster occasion Dulquer Salmaans birthday