தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்தம்: மலேசிய பிரதமர் தலைமையில் பேச்சு வார்த்தை சுமூகம்..!
Ceasefire between Thailand and Cambodia
எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து- கம்போடியா இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. குறித்த மோதல் காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இரு நாட்டு எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறியுள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டார். அதன்படி, இரு நாட்டு தலைவர்களுடன் தொலை பேசியில் நீண்ட நேரம் பேசினார்.
-wvwep.png)
இந்நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் போது தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயா அந்நாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தையில் கம்போடியா பிரதமர் ஹூன் மானெட்டும் பங்கேற்றார்.
குறித்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் மூலமாக இரு நாடுகள் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டு அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நாடுகளிலும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.
English Summary
Ceasefire between Thailand and Cambodia